அண்ணா பல்கலையில் 37 ஊழியர்கள் 'டிஸ்மிஸ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 21, 2019

அண்ணா பல்கலையில் 37 ஊழியர்கள் 'டிஸ்மிஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அண்ணா பல்கலைக் கழகத்தின் 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, அண்ணா பல்கலையின் விடைத் தாள் மதிப்பீடு முறைகேடு புகாரால், 37 ஊழியர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகளை தவிர மற்ற கல்லுாரிகளுக்கு, தேர்வு நடத்தி விடைத் தாள் மதிப்பிடும் பணிகளை, அண்ணா பல்கலையின் தேர்வு துறை மேற்கொள்ளும்.இந்த பணிகளில், 2018ல் எழுந்த முறைகேடு புகாரில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், விடைத் தாள் மதிப்பீடு தொடர்பாக அண்ணா பல்கலை துறை ரீதியாக விசாரணை நடத்தி, 37 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. தேர்வு துறையில், நிரந்தர பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த, பல்கலை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. 2017, 2018ஆம் ஆண்டில் தேர்வுகளில் முறைகேடில் ஈடுப்பட்டதால் 37 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2017, 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது குறிப்பிடிடத்தக்கது. இதில் ஊழியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews