2வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்; பொள்ளாச்சி, உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

2வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்; பொள்ளாச்சி, உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கலைக்க முயன்றதால் கல்லூரி மாணவிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர், பேஸ்புக்கில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பாக பழகினார். அந்த மாணவியை கடந்த பிப்ரவரி 12ம் தேதி, உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்து, காரில் ஏற்றிச்சென்று மாணவியின் ஆடையை சபரிராஜன் களைய, அதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த படத்தை காட்டி மிரட்டி, மாணவியிடம் பணம் கேட்டனர்.
அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறவே, மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு, அவரை காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் அடிக்கடி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை கொண்டுவந்து தரவில்லை என்றால் காரில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 25ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த போலீசார் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருநாவுக்கரசு கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கேட்டும், தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 3,000 பேர் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ‘பொள்ளாச்சி அப்பாவி பெண்கள் சீரழிக்கப்பட்ட வழக்கில் வேண்டும் வேண்டும், நீதி வேண்டும்! பொறுப்பற்ற ஆட்சி! பொள்ளாச்சியே சாட்சி!, வராதே வராதே, ஓட்டு கேட்க வராதே! என கோஷமிட்னர். மாணவிகளின் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து இருபுறமும் வாகனங்கள் பல கிமீ தூரம் அணிவகுத்து நின்றன. பல வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக சென்றன. பிறகு அங்கிருந்து சுமார் 1 கிமீ பேரணியாக உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்த மாணவிகள் அங்கேயே மறியலில் ஈடுபட்டனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீதி கேட்டு போராட்டம் நடத்திய மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் வந்து மாணவிகளிடம் பேச்சுநடத்தினர். இதையடுத்து பகல் 12.30 மணியளவில் மாணவிகள் மறியலை கைவிட்டனர். முன்னதாக மாணவி ஒருவர் மயங்கி விழுந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மறியல் பற்றி தகவல் பரவாமல் தடுக்க அப்பகுதியில் ஜாமர் கருவி வைக்கப்பட்டு செல்போன் இணைப்புகள் முடக்கப்பட்டன. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட மாவட்ட கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்காத கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றனர். இதனிடையே, மாணவர்கள் போராட்டம் தீவிரமடையலாம் என்பதால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுமார் 10 தனியார் கல்லூரிகளுக்கு திடீரென விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திரும்பி சென்றனர். மேலும், போராட்டம் நடந்தால் அதனை ஒடுக்குவதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரிகளுக்கு விடுமுறை பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவு பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews