உலக வரலாற்றில் இன்று (மார்ச் 24 (March 24) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 24, 2019

உலக வரலாற்றில் இன்று (மார்ச் 24 (March 24)


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

மார்ச் 24 (March 24) கிரிகோரியன் ஆண்டின் 83 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார்.
1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார்.
1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
1720 – முதலாம் பிரெடெரிக் சுவீடனின் மன்னராக முடிசூடினார்.
1765 – பெரிய பிரித்தானியா 13 குடியேற்றங்களிலும் தமது படையினரை நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றியது.
1829 – கத்தோலிக்கர் நாடாளுமன்றத்தில் பணியாற்ற அனுமதித்து பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
1832 – அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார்.
1837 – கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1854 – வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1878 – பிரித்தானியக் கப்பல் யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உருவாக்கினார்.
1921 – முதலாவது பன்னாட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மான்டே கார்லோவில் இடம்பெற்றது.
1934 – பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
1944 – நாட்சி செருமனியப் படைகள் உரோமை நகரில் 335 இத்தாலியப் பொதுமக்களைக் கொன்ரனர்,
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் செருமனிய சிறையில் இருந்து 76 நேசப் படையின் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். இந்நிகழ்வு பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.
1947 – மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.
1961 – பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் அமைக்கப்பட்டது.
1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.
1976 – அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.
1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சல்வதோரில் படுகொலை செய்யப்பட்டார்.
1993 – சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.
1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற சுழற்காற்றினால் 250 பேர் உயிரிழந்து, 3000க்கு மேல் காயமடைந்தனர்.
1999 – கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.
2003 – ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது.
2008 – பூட்டான் அதிகாரபூர்வமாக மக்களாட்சிக்கு மாறியது. முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
2015 – செருமன்விங்ஸ் விமானம் 9525 விமானம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணம் செய்த னைத்து 150 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1494 – அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர் (இ. 1555)
1607 – மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சுத் தளபதி (இ. 1667)
1693 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776)
1733 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1804)
1775 – முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835)
1834 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேய ஆடை வடிவமைப்பாளர், கவிஞர் (இ. 1896)
1874 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரர், நடிகர் (இ. 1926)
1884 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1966)
1893 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (இ. 1960)
1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1995)
1903 – மால்கம் மக்கரிச், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1990)
1905 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (இ. 1983)
1923 – டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர்
1932 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010)
1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்
1943 – ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்
1947 – ஆலன் சுகர், ஆங்கிலேயத் தொழிலதிபர்
1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 13வது பிரதமர்
1956 – இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்
1965 – தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
1973 – ஜிம் பார்சன்ஸ், அமெரிக்க நடிகர்
1974 – அலிசன் ஹன்னிகன், அமெரிக்க நடிகை
1978 – கிஷோர், தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2015)
1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்
1979 – லேக் பெல், யூத-அமெரிக்கநடிகை, இயக்குநர்
இறப்புகள்
1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)
1776 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1693)
1849 – ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (பி. 1780)
1882 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1807)
1905 – ழூல் வேர்ண், பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1828)
1915 – மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலேய-ஐரிய வானியலாளர் (பி. 1848)
1965 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (பி. 1924)
1976 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1887)
1980 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (பி. 1917)
1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)
சிறப்பு நாள்
மர நாள் (உகாண்டா)
உலக காச நோய் நாள்
சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்
மேற்கோள்கள்

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews