👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் மாநில தேர்வு வாரியத்தால் அச்சிடப்பட்ட 10ஆம் வகுப்புக்கான 3 பாடங்களின் வினாத்தாள் வெளியானதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி சான்றிதழுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.
மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களுக்கு வினாத்தாள் மொபைலில் வெளியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் கால்ஹர் தேர்வு மையம் அருகே மாணவர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் தேர்வுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது சில மாணவிகள் ஆட்டோவில் இருந்தபடி செல்போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கல்வி வாரிய அதிகாரி மாணவிகளின் இந்த செயலால் சந்தேகமடைந்தார்.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு அல்ஜீப்ரா, வடிவியல் (ஜியோமெட்ரி) மற்றும் அறிவியல் பாடங்களின் வினாத்தாள் கடந்த 11, 13, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியானது.
இதுதொடர்பாக, பிவாண்டியை சேர்ந்த இரண்டு தேர்வுக்கூட ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் மீது தேர்வு வாரியத்தினர் சந்தேகத்தின்பேரில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், செவ்வாய்க்கிழமை தகவல் தொழில்நுட்ப சட்டம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் (குற்றப்பதிவு மற்றும் தேடுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்