Breaking

Wednesday, February 13, 2019

JACTTO GEO - போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து(முழுவிவரம்)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
JACTTO GEO - ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து - பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கலாம்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog