👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
திருநெல்வேலி மாவட்ட, முதன்மை கல்வி அலுவலகத்தில், ஊழல், முறைகேடு நடந்ததாகவும், இதில் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், &'சிடி&' ஆதாரத்துடன், கலெக்டரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதுாரைச் சேர்ந்தவர் பரசுராமன். இலவச கல்வி விழிப்புணர்வுக் குழு தலைவராக உள்ளார். இவர், கல்வித் துறையில் ஊழல் நடப்பதாகக் கூறி, மொபைல் போன் உரையாடல் அடங்கிய, &'சிடி&' ஆதாரத்துடன், கலெக்டர் ஷில்பாவிடம் நேற்று புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவரின், போன் உரையாடலை கேட்க நேரிட்டது. அதில், &'முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், லட்சம், லட்சமாக சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.
அவர், பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஆசிரியர்களின் கலந்தாய்வு, இடமாறுதல், விடுப்பு விண்ணப்பங்களை காலதாமதம் செய்கிறார். கவுன்சிலிங் இடத்தை மறைத்து, வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு சாதகமாக நடக்கிறார். கல்வித் துறையில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
புகாரில் சம்பந்தப்பட்ட, நேர்முக உதவியாளர் அழகுராஜன், முதன்மை கல்வி அதிகாரிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு, சிலர் சதி வேலையில் ஈடுபடுகின்றனர். என் குரலை போல சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது, என் குரலே இல்லை. புகாரில் எந்த உண்மையும் இல்லை; முழுவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்