👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
கல்வராயன்மலை பகுதியில், பல நாட்களாக பள்ளிக்கு வராத இரண்டு அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 50 சதவீதத்திற்கும் குறைவான வாசிப்புத்திறன் உள்ள மாணவர்கள் இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாசிப்புத்திறன் குறைவான பள்ளிகளில், டி.இ.ஓ., தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை பகுதியில் ஆய்வு நடத்தியதில், வெதுார் மற்றும் விளாநெல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இரண்டும் பல நாட்களாக மூடப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இருவரும், பல நாட்களாக பள்ளிக்கு வருவதில்லை என்பதும், மாணவர்களை சேர்க்க எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்பதும் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து, வெதுார் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் ஆகிய இருவரையும், துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்து, டி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்