👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மனித இனத்தால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது இயற்கைப் பேரிடர்களும் துருவப் பகுதிகளின் பனி உருகுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தாலும் ஓர் உயிரினமே அழியும் அளவிற்கான செய்திகளை இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை. இதற்கு முன்பு அழிந்த உயிரினங்கள் மனிதர்களின் வேட்டையாடுதல் இல்லையென்றால் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றால்தான் அழிந்து போயிருக்கும். ஆனால், நேற்று ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தீவிரமாக எடுத்துச் சொல்லியுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்கரைகளில் காணப்படும் பெருந்தடுப்புப் பவளப்பாறைகளைக் (Great Barrier Reef) கொறித்து வாழும் பெரிய எலி போன்ற உயிரினமான பிரம்பில் கே மெலோமைஸ் (Bramble Cay melomys) முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சான்டி தீவுதான் அதன் பிறப்பிடமும் வாழிடமும். அந்தப் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உயிரினத்தைப் பார்க்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சான்டித் தீவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் இதையொத்த உயிரினங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால், நியூகினியா தீவு முழுமையாக ஆராய்ச்சி ஆவணப்படுத்தப்பட்டபோதிலும் இந்த உயிரினத்தைக் காண முடியவில்லை.
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான தீவுகள் மூழ்க ஆரம்பித்துள்ளன. முக்கியமாக அந்தத் தீவுகளின் அருகே உள்ள பவளப்பாறைகள் வேறு இடங்களில் வளர ஆரம்பித்ததால் அவற்றைச் சார்ந்திருந்த இந்த உயிரினம் அழிந்துவிட்டது எனக் கூறுகின்றனர். உலகிலேயே அதிகமான விலங்குகள் அழிந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்