👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
மதுரை மாவட்டத்தில் கல்வித்துறை செயலியில் மாணவர் வருகையை பதிவு செய்வது கிராமப்புற ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
மாவட்டத்தில் 1238 அரசு, உதவிபெறும் மற்றும் 220 பிற பள்ளிகளில் மாணவர் வருகை கடந்த டிச., முதல் 'தமிழ்நாடு ஸ்கூல் அட்டடென்ஸ்' செயலியில் பதிவு செய்யப்படுகின்றன.
காலை 9:30 மணிக்குள் வருகை பதிவு முடிக்க வேண்டும். பிறகு பதிவு செய்தால் 'தாமதம்' என பதிவாகும். இதில் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பல ஆசிரியர்களிடம் ஆண்ட்ராய்டு அலைபேசி இல்லை. பிறரின் அலைபேசியை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
வருகையை பதிவு செய்ய இன்டர்நெட் வசதி வேண்டும். கிராமங்களில் 'சிக்னல்' கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.
குறிப்பாக சிவரக்கோட்டை, குராயூர், எழுமலை, சாப்டூர், அணைக்கரைப்பட்டி, வளையபட்டி, சரந்தாங்கி, ராமக்கவுண்டம்பட்டி, கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது என்றார்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த செயலி மூலம் மதுரையில் தினமும் 87 சதவீதம் வரை மாணவர் வருகை பதிவு செய்யப்படுகிறது.
நெட் வசதி இல்லையென்றால் ஆப்லைனில் பதிவு செய்யலாம்.
இன்டர்நெட் சிக்னல் கிடைத்தவுடன் விவரம் தானாக பதிவேற்றம் ஆகிவிடும். பதிவாகும் வரை அலைபேசி 'நெட்'ஐ ஆப் செய்யக்கூடாது.
12:00 மணிக்கு மேல் பிற்பகல் என காட்டிவிடும். அதற்கு மேல் முற்பகல் பதிவுகளில் மாற்றம் செய்ய முடியாது.
எந்த இடத்தில் எந்த நேரத்தில் ஆசிரியர் வருகை பதிவு செய்கின்றனர் என்ற விவரத்தையும் 'லாக் இன்'ல் காட்டும். கிராமப்புறங்களிலும் தடையின்றி சிக்னல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்