👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் செயல்பட்டு வரும், ஆதி திராவிட நலப்பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 476 பணியிடங்கள் காலியாக உள்ள. ஆசிரியர் பணியிடங்கள் பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மட்டுமே நிரப்ப முடியும்.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக முறையே, 8,000 ரூபாய், 9,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது. மாநிலம் முழுவதும் ஆதி திராவிட பள்ளிகளில், 175 இடைநிலை ஆசிரியர்கள், 193 பட்டதாரி ஆசிரியர்கள், 108 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 476 பணியிடங்கள் காலியாக உள்ளன
பள்ளிகள் அமைந்துள்ள கிராமப் பகுதியை சேர்ந்த ஆதி திராவிடர், பழங்குடியினர் இனத்தில், தகுதியுள்ளவர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளில், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர், கல்வித்துறை அலுவலர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் ஈடுபடுவர். தற்காலிக ஆசிரியர்கள், மாதத்தில் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம்
எதிர்காலத்தில் பணி நிரந்தரம், கூடுதல் ஊதியம், அரசு பள்ளிகளில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோர முடியாது. தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள், 2019 - 20 கல்வியாண்டிலும் தொடர்ந்து பணியாற்ற, அரசின் முன் அனுமதி பெற்று வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்