நாளை (28-01-2019) முதல் 2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக் குழு ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் உடன் இணைந்து முழுவீச்சுடன் களமிறங்குகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 27, 2019

நாளை (28-01-2019) முதல் 2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக் குழு ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் உடன் இணைந்து முழுவீச்சுடன் களமிறங்குகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
நாளைமுதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவும் போர்களத்தில் பங்கேற்கிறது *2009 & TET போராளிகளுக்கு போர்க்கால வீர வணக்கம்.....* *தமிழகத்திலுள்ள போராட்டங்களில் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த நமது 2009 & TET போராட்டக்குழுவின் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் வரலாற்றில் மிக மிக முக்கியமானது. நாம் நமது ஒற்றைக் கோரிக்கைக்காக தொடர்ந்து பல கட்ட களப் போராட்டங்களையும், சட்ட போராட்டம் மற்றும் நிர்வாக போராட்டங்களையும் சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறோம்.*
*இன்று தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஜாக்டோ -ஜியோ என்ற குடையின் கீழ் கடந்த 4 நாட்களாக தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசும் அழைத்து பேசாமல் போராடி வரும் முக்கிய பொறுப்பாளர்களை தொடர்ந்து கைது செய்து வருவது, சிறையில் அடைப்பது, சஸ்பெண்ட் செய்வது போன்ற ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.* திருச்சியில் 20/1/2019ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளின்படி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு நமது போராட்டக்குழுவின் சார்பில் ஜனவரி 22 முதல் பள்ளி செல்லாது வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட முடிவாற்றி அதனை செவ்வனே செய்து வருகிறோம்.
*தற்போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவோடு நேரில் களத்திலும் கலந்து கொண்டு பங்காற்றிட நமக்கு ஜாக்டோ ஜியோ வின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மூலம் அழைப்பு வந்துள்ளது. *மேலும் இந்த போராட்டக் களத்தில் நமது இனத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கத் தலைவர்களை தமிழக அரசு தனது அடக்குமுறையால் அடக்க நினைத்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்து எந்த ஒரு கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பேசாமல் எதேச்சதிகாரமாக செயல்படுவதை நமது போராட்டக்குழு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசின் இத்தகைய சர்வாதிகார ஆணவ போக்கினை முறியடிக்கும் விதமாக 22.01.2019 முதல் கடந்த 4 நாட்களாக நாம் பள்ளி செல்லாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். நாளை 28.01.2019 முதல் நாம் அனைவருக்கும் பொது எதிரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை அசைத்துப் பார்க்கும் விதமாக நமது போராட்டக் குழுவின் சார்பாக இருக்கும் அனைத்து ஆசிரியப் போராளிகளும் நேரடியாக போர்களத்தில் இறங்கி இன்னலுக்கு ஆளாகியுள்ள நம் இனத்திற்கு கரம் கொடுத்து நம்முடைய ஒற்றைக் கோரிக்கையை அவர்களது கோரிக்கைகளுடன் இணைத்து வெல்வதற்கு ஏதுவாக "களம் காண்போம்"
போர்க்களங்களில் போர் முறைகள் மாறலாம்...ஆனால் போராட்டம் மாறாது.... போர் குணங்களும் குன்றாது.அடக்குமுறைகளுக்கும் ஆணவப்போக்கிற்கும் என்றும் நாம் அசைந்து கொடுக்கமாட்டோம்...நாம் பலகளம் கண்ட உண்மை போராளிகள். முழு பலமாக "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற பழமொழியை நிரூபிக்கும் விதமாக நமது போராட்டக்குழு நண்பர்கள் அனைவரும் களம்கண்டு நமது கோரிக்கையையும் சேர்த்து வென்றிட முழுமனதாய் பங்குகொள்ளுமாறு மாநில போராட்ட குழுவின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நமது போராளிகளின் விருப்பத்திற்கு இசைந்து எத்திசை நோக்கினும் போர்முரசு கொட்டட்டும்..இனம் பாதுகாத்திட இன்று முதல் நேரடியாக போராட்டக்களத்திற்கு ஆயத்தமாவோம்... ஜே.இராபர்ட்(2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை)
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews