👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
கேட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 11 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு கடந்த நவம்பர் 25-ம் தேதி நாடு முழுவதும் 147 நகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 2.1 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகளை கொல்கத்தா ஐஐஎம் நேற்று வெளியிட்டது. இதில் 11 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்தனர். இவர்கள் அனைவரும் என்பதுடன் பொறியியல் படித்தவர்களாவர். இதுதவிர 21 பேர் 99.99 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தின் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் கட் ஆப் மதிப்பெண் உயரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு தேர்ச்சியில் மாணவர்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
மேலும், தேர்ச்சி பெற்ற 70 சதவீதம் பேர் பொறியியல் பட்டம் படித்தவர்களாக உள்ளனர்.சென்னை அசோக் நகரை சேர்ந்த எஸ்.ஆகாஷ் 99.9 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். எஸ்.எஸ்.என் கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு பொறியியல் மாணவரான ஆகாஷ் கூறும்போது, ‘‘மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஒராண்டாக தீவிரமாக கேட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தேன். ஒவ்வொரு பகுதிக்கு தனித்தனியாக பிரித்து அதிக அவகாசம் எடுத்து படித்தேன்.
அதிகளவு மாதிரித் தேர்வுகளை எழுதியது தேர்வில் நல்லபலனை தந்தது. தீவிரமாக முயற்சித்தால் எல்லாரும் வெற்றி அடையலாம். அடுத்து அகமதபாத் ஐஐஎம் அல்லது பெங்களூர் ஐஐஎம் நிறுவனத்தில் எம்பிஏ படிக்க இருக்கிறேன்’’என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்