whatsApp, Facebook தகவல் திருட்டை தவிர்க்க சில வழிமுறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 05, 2018

whatsApp, Facebook தகவல் திருட்டை தவிர்க்க சில வழிமுறைகள்

தொழில்நுட்பம் வளர வளர நமது வேலைப்பளு குறைந்தாலும், நேரம் மிச்சப்படுத்தபட்டாலும்,இந்த தொழில் நுட்பத்தினை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்திருப்பது நாம் அறிந்த ஒன்றே, இவ்வாறான குற்றங்களை நாம் சைபர் கிரைம் குற்றம் என்று அழைக்கிறோம்.. உலகெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் மிகவும் தேடப்படுவோர் பட்டியலில் சிலர் இருந்தாலும் முக்கியமான தகவல்களை அழிப்பது மற்றும் திருடுதல் போன்ற குற்றங்கள் பெருகி விட்டன.மிகவும் விலை உயர்ந்த வைரஸ் மைடூம் ஆகும். இதன் மூலம் பல கோடி இழப்பீடு ஏற்பட்டது . உலகெங்கும் பல கோடி மக்கள் சமூக வலைதல்களான பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தி வருகின்றனர், இவர்களில் 20 சதவீதம் பேர் தகவல் திருடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது ஒருவருடைய புகை படம், தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி போன்றவற்றை திருடி தவறானவழிகளில் பயன்படுத்துகின்றனர் தகவல் திருடர்கள். இது போன்ற தகவல் திருட்டுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சில வழிமுறைகளை காண்போம் 1) உங்களுடைய பயனர் பெயர், கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. 2) இணையம் பயன் படுத்தும் போது “HTTPS:” என துவங்கும் இணைய தளங்கள் பாதுகாப்பான இணைய தளங்கள் ஆகும், எனவே இவற்றை கவனிப்பது அவசியம் ஆகும்
3) கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றி அமைப்பது பாதுகாப்பான ஒன்றாகும், 4) கடவுச்சொல்லை தேர்வு செய்யும் போது நமது பிறந்த தேதி நம்முடைய பெயர் போன்ற எளிமையான கடவுச்சொல்லை தவிப்பது நலம். மேலும் கடவு சொல்லில் எழுத்துகள், எண்கள் குறியீடுகள் போன்றவற்றை கலந்து கொடுப்பது நல்லது. 5) உங்களுக்கு தெரியாதவரிடம் இருந்து வரும் ஈ-மெயில்-ஐ திறக்காமல் இருப்பதும், பதிலளிக்காமல் இருப்பதும் பாதுகாப்பானதே.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews