UPSC/TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி: ,Click Here To Apply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

UPSC/TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி: ,Click Here To Apply




சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித நேயம் அறக்கட்டளை சார்பில், இந்திய அளவில் முதல் முறையாக, அனைவரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 'டிவி' வழியே, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இது குறித்து, சைதை துரைசாமி விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில், பின்தங்கிய மாணவர்களை, அரசு உயர் பதவிகளில், அதிக அளவில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை, யு.பி.எஸ்.சி., -- டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வுகளில், 3,226 பேர்; வங்கி தேர்வு, ரயில்வே, காவல் துறை பணி, குரூப் - 4 தேர்வு உள்ளிட்ட, பல்வேறு பணிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெறறுள்ளனர். தற்போது, கிராமப்புற மாணவர்களிடமும், போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், சென்னை வந்து தங்கி பயிற்சி பெற, குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி செலவு செய்தாலும், அனைவராலும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடிவதில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர் எண்ணிக்கை, 10 பேரை கூட தாண்டுவதில்லை. எனினும், ஆண்டுதோறும் படிக்க விரும்புவோர் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சி, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது, மனிதநேய மையத்திற்கு, இயலாத காரியமாகி விடுகிறது.

எனவே, அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் முதல், 'டிவி' வழியே, இலவசமாக போட்டித் தேர்வுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம். மாணவர்கள், வேலையில் உள்ளவர்கள் என, அனைத்து தரப்பினரும், வீட்டிலிருந்தபடியே பயிற்சிக்கு தயாராகலாம். இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர், போட்டித் தேர்வுக்கு தயாராக, தங்குமிடம், பயிற்சி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இது குறித்த முழு விபரங்களைப் பெற

மனிதநேய அறக்கட்டளையின், mntfreeias.com என்ற, இணையதளத்தை பார்வையிடவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 24330095 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளவும். 'டிவி' வழியே நடத்தப்பட உள்ள, பயிற்சிகளை பெற இயலாத நிலையில், கிராமங்கள் அல்லது மாணவ- - மாணவியர் இருந்தால், அவர்களுக்கு உதவ விரும்பும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு, உதவிகளைப் பெறலாம்.

இது தொடர்பாக, ஆலோசனை கூற விரும்புவோர், தங்கள் ஆலோசனைகளை, manidhanaeyagmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews