TNPSC: குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

TNPSC: குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர்

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர் மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது* *இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள்* *வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை* *டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது
*ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும்* *அதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்* *இந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது*
*தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது* *இதற்கென பிரத்யேக இணையதள வசதியை டி.என்.பி.எஸ்.சி. உருவாக்கியுள்ளது* *இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்* *(பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர், வினா எண்). இத்துடன், தேர்வர்கள் குறிப்பிடும் விடையையும், அதற்கான ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்*
*ஆதாரமாகக் குறிப்பிடும் புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பாளர் பெயர், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்* *கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 900 பேர் வரை உத்தேச விடைகளை மறுத்து செய்துள்ளனர்*
*உத்தேச விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புக்கு வரும் 20-ஆம் தேதி கடைசி என டி.என்.பி.எஸ்.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது* *தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வினை 6 லட்சம் பேர் எழுதினர்* *அவர்களில் இதுவரை 900 பேர் மட்டுமே உத்தேச விடைகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது* *3 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில் மேலும் சிலர் உத்தேச விடைகளை மறுத்து ஆதாரங்களுடன் மனு செய்வார்கள் எனத் தெரிகிறது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews