சம ஊதிய பொங்கல் சாப்பிட ரெடியா???? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

சம ஊதிய பொங்கல் சாப்பிட ரெடியா????

*10 ஆண்டுகளாக பழைய கஞ்சி குடித்து கால் வயிறும் அரைவயிறுமாக திரியும் முரண்பாடுள்ள ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரிய இனமே* ... *சம ஊதியப் பொங்கல் சாப்பிட தயாரா* ..?? *பழைய ஊதிய விறகுகளை* *ஊதிய வழக்கு தீப்பெட்டியால்* பற்ற வைத்து *ஊதியக்குழு அடுப்பை மூட்டி* நமது *எட்டு நாள் போராட்ட வெற்றி அரசு உத்தரவாத கடிதப் பானையில்* *சம ஊதிய பொங்கல்* வைக்கத் துணிந்தோம்..
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்ட காவிரி நீர் ஊற்றி* சம ஊதியப் பொங்கலுக்கான *உலையைக் கொதிக்கச்* செய்து *நிதித்துறைச் செயலரின் அரசாணை அரிசியை* போட்டு *அடையாள உண்ணாவிரதங்களாக ஏலம், பாசிப்பருப்பு, திராட்சை, முந்திரி போட்டு* காலங்கனிய காத்திருந்து *தித்திப்பு நான்கு நாள் உண்ணாவிரத பனைவெல்லம்* இட்டு *கல்வித்துறைச் செயலரின் சிபாரிசுக் கடித நெய்யூற்றி* *சம ஊதிய வெற்றிப் பொங்கல் பொங்கிக் கொண்டிருக்கிறதே* ... *ஆக்கிய பொங்கலை உரிய நேரத்தில் ஒரு நபர் குழு அடுப்பிலிருந்து இறக்குவது அவசியம்தானே
*எவ்வளவு காலந்தான் பழைய ஊதிய விறகுகளும் தாங்கும்..?..* *இந்த வைரம்பாய்ந்த பழைய ஊதிய விறகுகள் எவ்வளவு காலமும் தாக்கு பிடிக்குமென்றாலும் ஆக்கிய சம ஊதியப் பொங்கலை உரிய நேரத்தில் இறக்குவது அவசியந்தானே* ... *இறக்க யோசித்து தயங்கினால் சம ஊதியப் பொங்கல் காலதாமதத்தால் கூழாகி வீணாகி விடக்கூடாது அல்லவா* .. *சுடுபானையை சமயத்தில் இறக்க உதவும் பழைய கரித்துணி போன்றதாக இந்த அடையாள உண்ணாவிரதம் நமக்குத் தோன்றலாம்* . ஆயினும் *இந்த கரித்துணிப் போராட்டமில்லாமல் சுடுபொங்கலை விரைவில் இறக்கி வைக்க வாய்ப்பில்லை தானே* ... *அடையாள உண்ணாவிரதம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பழைய கரித்துணியாக தெரியலாம்* . ஆனால், *நமது சம ஊதிய போராளிகளின் வீரச்சொறிந்த உண்ணாவிரத சிவப்புரத்தத் துணி புதுச்சரித்திரம் படைக்கும்தானே
*பழைய ஊதியம், புதிய ஊதியமென்னும் பாகுபாடின்றி இரு கரங்களையும் ஒன்றாக இணைத்து சம ஊதிய வெற்றிப் பொங்கல் பானையை இறக்க வாருங்கள் என்றே அழைக்கிறோம்* ... *மத்திய அரசூதிய பிரியாணியை சமைப்பவராக இருந்தாலும் சாப்பிட மறுக்க இயலாத சம ஊதியப் பொங்கல் பானை இறக்க உதவ வரலாமே* ... *வாருங்கள்* .... *ஒருநபர் அடுப்பிலிருந்து விரைந்து நமது சம ஊதியப் பொங்கல் பானையை இறக்கி சம ஊதிய அரசாணை கரண்டியால் சம ஊதியப் பொங்கலைப் பகிர்ந்துண்ணுவோம் நண்பர்களே* .. *சம ஊதியப் பொங்கல் சாப்பிட ரெடியா???* *நாங்க ரெடி?? அப்ப நீங்க???* *பா.அசோக்குமார்* *சத்தியமங்கலம்* *ஈரோடு மாவட்டம்* .
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews