உருது தேர்வில் தோல்வியடைந்த மாணவிக்கு தகுதி தேர்வு நடத்தி யுனானி படிப்பில் சேர்க்க பரிசீலனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

உருது தேர்வில் தோல்வியடைந்த மாணவிக்கு தகுதி தேர்வு நடத்தி யுனானி படிப்பில் சேர்க்க பரிசீலனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

யுனானி மருத்துவ படிப்பில் சேர தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் தகுதித் தேர்வை நடத்த இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையை சேர்ந்த பெளசியா எனபவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு இந்த ஆண்டுக்கான யுனானி மருத்துவ படிப்பில் சேர முழு தகுதி இருந்தும் இடம் மறுக்கப்பட்டுள்ளது அதனால் தனக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி. ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஹாஜா மொய்தீன் கிஸ்தி வாதிடும்போது, மனுதாரர் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 429 மதிப்பெண்ணும், 12 வகுப்பு பொதுத்தேர்வில் 1101 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார்.கணினிக்கல்வி
அரபு மொழியை முதன்மை மொழிப் பாடமாகவும், உருது மற்றும் இந்தியை விருப்ப பாடமாகவும் பயின்றுள்ளார். இந்த தகுதிகளால் அவருக்கு யுனானி படிப்பில் சேர முழு தகுதியும் உள்ளது. ஆனாலும், அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது என்றார் அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ.குமார் ஆஜராகி, யுனானி படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த 27 பேரில், 25 பேருக்கு தேர்வு நடத்தப்பட்டு இடம் வழங்கப்பட்டுள்ளது இதில் வழக்கு தொடர் ந்த மாணவி உருது தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதனால் அவருக்கான இடம் மறுக்கப்பட்டது என்றார்
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா அளித்த உத்தரவில், “ மனுதாரர் உருது மொழித்தேர்வு இல்லாமலேயே சித்தா, ஆயுர்வேதா, யோகா, நியூரோபதி, ஹோமியோபதி படிப்புகளுக்கு தகுதி உள்ளவர் ஆனால் மனுதாரர் யுனானி படிப்பில் சேர விருப்பம் தெரிவிப்பதால், வரும் 19 தேதி உருது தகுதி தேர்வை நடத்த வேண்டும் தகுதியான மதிப்பெண்ணை அவர் பெறும்பட்சத்தில் இதே கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் இடம் அளிப்பது குறித்து இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறை பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews