சூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்பதை தடுப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 28, 2018

சூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்பதை தடுப்பது எப்படி?



இன்றை காலத்தில் உள்ள ஒரு வயது குழந்தைகளே ஸ்மார்ட் போனை அவ்வளவு எளிதாக பயன்படுத்துகின்றனர். நமக்கு தெரியாத பல தொழில் நுட்ப அறிவுகளையும் அவர்கள் அவ்வளவு சுபலமாக கையாளத் தெரிந்து வைத்துள்ளனர்.

நமது கிராப்புறங்களை சேர்ந்த சிறுவர்களும், ஒரு சில நகர்புறங்களிலும் வீடுகளில் சிறுவர்கள் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் நற்செயலுக்காக கொடுத்தாலும் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், நண்பர்களுடனோ இல்லை. வேறு சிலருடனே சேர்ந்த தவறான வலைதளங்கு சென்று விடுகின்றனர்.

நாம் படிப்புக்காக கொடுத்தாலும், அவர்கள் தவறாக பயன்படுத்துவதையும், அவர்கள் எந்த வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு செய்து விட்டால், அவர்கள் அதைத்தான் பயன்படுத்த முடியும். மற்ற வலைதளங்களை அவர்களால் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்கு தற்போது ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது. கேம் முதல் வலைதளம் வரை: இன்று ப்ரீகேசி குழந்தைகள் முதல் 12ம் வகுப்பு வரை செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஆபாச வலைதளம் என்று தெரிந்தும் பயன்படுத்துகின்றனர். தமிழக பள்ளி கல்விதுறையும் மாணவர்களுக்காக அனைத்து பாடங்களையும் டியூப்பில் டியூசன் போன்று வழங்கின்றது. இதை பார்க்க மாணவர்கள் சென்றாலும் அதில் ஆபாசங்களும் வரும்.

பெற்றோர்கள் அலுவலகம் மற்றும் வேலை செய்பவர்களா இருப்பார்கள். தங்கள் குழந்தைகள் எந்த மாதிரி காட்சிகள் பார்கின்றனர் என்றும் அந்த வலைதளம் பார்க்கின்றனர் என்றும் கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களால் இதை கண்காணிக்க முடியாமலும் இருந்தது. சூசைடு கேம், மன நிலை பாதிப்பு: சூசைடு கேம்களான ப்ளுவேல், மோமோ உள்ளிட்ட கேம்களும், மனநிலை பாதிக்கும் விளையாட்டகாவும் மாறி குழந்தைகளுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கள் அனைத்தும் திருவிட்டு கடைசியில் அவர்களின் உயிர் பலியாகும் கதைகள் இந்தியா வரை நடந்துள்ளது.

திசை திருப்பும் வலைதளம்: பெற்றோர்களின் செல்போனை அல்லது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்போன்களில் அவர்களுக்கு பிடித்தமான உபயோகமான வலைதளங்கள் பார்க்கும் வேறு, சூசைடு கேம், மோமோ சவால் விடும் விளையாட்டு, ப்ளுவேல், ஆபாச வலைதளம் போன்றவை திரையில் தோன்றி அவர்களின் மனநிலையை மாற்றும்.
 குழந்தைகளை பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்: குழந்தைகள் என்ன வலைதளம் பயன்படுத்துகின்றார்கள் அவர்கள் அதில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர். சூசைடு கேம், ஆபாச வலைதளம் போன்வற்றையும் கண்காணிக்க முடியுமான என்றால் தற்போது முடியும். எந்த வலைதளத்தை பயன்படுத்துவது, எவ்வளவு மணி நேரம் பயன்படுத்து அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்று எல்லாம் கண்காணிக்க முடியும்.

கூகுள் செயலி: குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை, அவர்களது பெற்றோர் நிர்வகிக்கும் புதிய செயலியை, கூகுள் நிறுவனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் ஃபேமிலி லிங் என்ற செயலியை கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம், தங்களது குழந்தைகள் எந்த மாதிரியான இணையதளங்களை பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை பெற்றோர்களே தங்களது ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம் என்று அறிவித்தது. பெற்றோர்களின் செல்போன் மூலம் அறியலாம்: மேலும், ஒரு வாரத்தில் தங்கள் குழந்தைகள் பார்த்த இணையதளங்கள், புகைப்படங்கள் மற்றும் க்களையும் ஆய்வு செய்யலாம் என கூறிய கூகுள் நிறுவனம், வெளியில் சென்றுள்ள குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதையும், இந்த செயலி மூலம் தங்களது செல்போன் மூலமே அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

பதிவிறக்கம் செய்ய: இந்த செயலியை தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனம், Google Family Link for parents என்ற பெயரில் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. அல்லது https://play.google.com/store/apps/deftails com.google.android.apps.kids.familylink&hl=en_IN சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews