தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, பெரம்பலுார், கடலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உட்பட, 23 மாவட்டங்களைச்சேர்ந்த, 2,500 இளைஞர்களை தேர்வு செய்து, ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி அளிக்க, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரியில், 2 மையம்; அம்மாபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தலா ஒன்று; மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என, மொத்தம், ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிச., மாதம் முதல், பயிற்சி துவங்குகிறது.
ஓவன் ஆடை உற்பத்தி டெய்லர், பின்னலாடை டெய்லர், செக்கிங், உற்பத்தி மேற்பார்வையாளர், மெர்ச்சன்டைசர், பேஷன் டிசைனர், தர கட்டுப்பாடு நிர்வாகி என, ஏழுவகை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.
இது குறித்து, நிப்ட்-- டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:கிராமப்புற இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஏழுவகை பயிற்சிகள் உள்ளன; இளைஞர்கள், கல்வித்தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இரண்டு ஆண்டுகளில், 2500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; முதல்கட்டமாக, 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.இத்திட்டத்தில், 4 முதல் 5 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும் தங்குமிடம், உணவு இலவசம். போக்குவரத்து செலவும் திரும்ப வழங்கப்படும்.டெய்லர், செக்கிங் பயிற்சிக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். பேஷன் டிசைனருக்கு, பிளஸ்2 படித்திருக்க வேண்டும்.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்தாலோ அல்லது, நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாக இருந்தால், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், இணைய விருப்பம் உள்ளோர், 97914 83111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்