உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 12 (November 12 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 12 (November 12 )




நவம்பர் 12 (November 12 ) கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
764 – திபெத்தியப் படைகள்
சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.

1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு
கத்தோலிக்க திருச்சபையை
இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு
மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார் .
1893 – அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய
பாக்கித்தான் )
ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1905 – நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1918 – ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 – மகாத்மா காந்தி
இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1927 – லியோன் திரொட்ஸ்கி
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1928 – வெசுட்ரிசு என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர் :
காபோன் சண்டை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுப் படைகள்
காபோன் , லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
1941 – இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானியாவின் வான்படை செருமனியின் திர்பித்சு போர்க்கப்பலை நோர்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
1948 – டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1956 – மொரோக்கோ , சூடான் ,
தூனிசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1956 – சூயெசு நெருக்கடி : இசுரேலிய படைகள்
காசாக்கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
1969 – வியட்நாம் போர் : மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் எர்சு வெளியிட்டார்.

1970 – போலா சூறாவளி கிழக்குப் பாக்கித்தானைத் (இன்றைய
வங்காளதேசம்) தாக்கியதில் 500.000 பேர் வரை இறந்தனர்.
1975 – கொமொரோசு ஐநாவில் இணைந்தது.
1980 – நாசாவின் விண்கப்பல்
வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 – கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982 – லியோனீது பிரெசுனேவ் இறந்ததை அடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989 – தென்னிலங்கையின்
உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990 – இளவரசர் அக்கிகித்தோ
சப்பானின் 125-வது பேரரசராக முடிசூடினார்.
1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991 – கிழக்குத் திமோர் , டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம்
இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994 – இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1995 – குரோவாசிய விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.

1996 – சவூதி அரேபியாவின் போயிங் விமானமும்
கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
1999 – துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு
நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
2001 – நியூயோர்க் நகரில்
டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 – ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு
தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006 – முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
2011 – ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
2014 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட
பிலே விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் தரையிறங்கியது.
2015 – பெய்ரூத் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

2017 – ஈரானில் ஈராக் எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 அளவு
நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1817 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892 )
1819 – மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ.
1899 )
1840 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917 )
1842 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1919 )
1866 – சுன் இ சியன் , சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1925 )
1879 – சே. ப. இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1966 )

1896 – சலீம் அலி , இந்திய இயற்கையியலாளர் (இ. 1987 )
1918 – சிறீபதி சந்திரசேகர் , இந்திய கல்வியாளர், அரசியல்வாதி (இ. 2001)
1920 – வல்லிக்கண்ணன் , தமிழக எழுத்தாளர் (இ. 2006 )
1934 – சார்லஸ் மேன்சன் , அமெரிக்க மதக்குழுத் தலைவர் (இ. 2017 )
1947 – ரெஜினால்ட் குரே , இலங்கை அரசியல்வாதி, வடமாகாணத்தின் 5-வது ஆளுநர்
1948 – அசன் ரவ்கானி , ஈரானின் 7வது அரசுத்தலைவர்
1961 – நாடியா கொமனட்சி , உருமேனிய சீருடற்பயிற்சியாளர்
1971 – சென் குவாங்செங் , சீன-அமெரிக்க செயற்பாட்டாளர்
1982 – ஆன் ஹாத்தவே , அமெரிக்க நடிகை

இறப்புகள்

1623 – யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி.
1582 )
1916 – பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1855 )
1946 – மதன் மோகன் மாளவியா , இந்திய அரசியல்வாதி (பி. 1861 )
1969 – லு சாஃவ்சி, சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1898)
1994 – வில்மா ருடோல்ஃப் , அமெரிக்க தடகள விளையாட்டு வீரர் (பி. 1940 )
1997 – கண. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (பி.
1913 )

2001 – சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி , அமெரிக்க இந்துத் துறவி (பி. 1927 )
2005 – மது தன்டவதே , இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924 )
2015 – ஈ. எல். ஆதித்தன் , தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்
தந்தையர் தினம் (இந்தோனேசியா)
உலக நுரையீரல் அழற்சி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews