சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 09, 2018

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது. நாளை முதல் நவ.1ம்தேதி வரை அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in

என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படவோ, பெறப்படவோமாட்டாது. காலி பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருந்தால் 8ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்தவ ராக இருக்கவேண்டும். 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப் பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடி யிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிமீக்குள் இருக்கவேண்டும்.

சமையல் உதவியாளர் பணி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக வும் இருக்கவேண்டும். பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருந்தால் எழுதப் படிக்க தெரிந்தவராகவும், 1-7-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிமீக்குள் இருக்கவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம் மற்றும் கல்விச்சான்று, பள்ளி மாற்றுச்சான்று, சாதி, இருப்பிடம், வருமானச்சான்று, குடும்ப அட்டை, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்று மற்றும் ஏனைய முன்னுரிமை சான்று இணைப்புகளுடன் அக்.10 முதல் நவ.1ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ.7700 - 24,200 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ரூ.3000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்துகொள்ள லாம். நவ.1ம்தேதி மாலை 5.45 மணிவரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews