காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம்

மதுரையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கங்களுக்கு குறைந்தபட்சம் ஏழு மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவின்பேரில் 6 - 9ம் வகுப்பு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் திருத்திய காலாண்டு விடைத்தாள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது 15 கல்வி ஒன்றியங்களிலும் ஏதாவது ஒரு பள்ளியில் பாடம் வாரியாக வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது
இதில் ஏராளமான தவறுகள் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியடைய வைத்தது.பி.இ.ஓ.,க்கள் கூறியதாவது பெரும்பாலான விடைத்தாளில் தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது சில பள்ளிகளில் ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து மாணவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆசிரியர் விடைகள் சொல்லி கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது Kaninikkalvi ஒரு ஒன்றியத்தில் 8ம் வகுப்பு மாணவர், வரைபடத்தில் 'டில்லி'யை வேறு மாநிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கும் 2 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு ஒன்றியத்தில், எதுவுமே எழுதாத பக்கங்களுக்கும் குறைந்தபட்சம் ஏழு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன
பார்டரில்' தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவரின் விடைத்தாளில், இரண்டு மதிப்பெண் வினாவிற்கு நான்கு மதிப்பெண் அளிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது  ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டால், 'ஆல் பாஸ்' போட வேண்டுமென்றால் இதுபோல் ஏதாவது ஒரு இடத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளது' என தெரிவித்தனர், என்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews