தினம் ஒரு திருக்குறள்: படம் மற்றும் தமிழ் அறிஞர்களின் விளக்க உரைகளுடன்: 22/10/18 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 22, 2018

தினம் ஒரு திருக்குறள்: படம் மற்றும் தமிழ் அறிஞர்களின் விளக்க உரைகளுடன்: 22/10/18


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று. தேவநேயப் பாவாணர் உரை: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை. 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப் படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார்.
.
கலைஞர் உரை: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. சாலமன் பாப்பையா உரை: அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Translation No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws. Explanation There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it. Transliteration Araththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai Ketu.
.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews