உலக வரலாற்றில் இன்று( செப்டம்பர் 20 ( September 20 )) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 20, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று( செப்டம்பர் 20 ( September 20 ))




செப்டம்பர் 20 ( September 20 )
கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான்.
1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.
1498 – சப்பானில் இடம்பெற்ற
நிலநடுக்கம் மற்றும்
ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.
1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு
பிரான்சு, இங்கிலாந்து ,
எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா
மொரீசியசில் வெளியிட்டது.
1854 – கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில்
உருசியரைத் தோற்கடித்தன.
1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள்
தில்லியைக் கைப்பற்றின.
சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1878 – தி இந்து முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1909 – நன்னம்பிக்கை முனை, நட்டால், ஒரேஞ்சு, திரான்சுவால் ஆகிய பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு
தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1941 – லித்துவேனியாவில் 403 யூதர்கள் (128 ஆண்கள், 176 பெண்கள், 99 குழந்தைகள்) கொல்லப்பட்டனர்.
1942 – உக்ரைனில் நாட்சி ஜெர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 – மகாத்மா காந்தியும்
சவகர்லால் நேருவும்
பிரித்தானியப் படைகளை
வெளியேறக் கோரினர்.
1946 – முதலாவது கான் திரைப்பட விழா இடம்பெற்றது.
1946 – பொது வாக்கெடுப்பு நடைபெற்று ஆறு நாட்களின் பின்னர், டென்மார்க் மன்னர் பத்தாம் கிறித்தியான் பரோயே தீவுகளின் விடுதலைப் பிரடனத்தை ரத்துச் செய்தார்.
1955 – சோவியத் ஒன்றியத்துக்கும்
கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1966 – சேர்வெயர் 2 விண்கலம்
சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1977 – வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
1979 – பிரான்சின் ஆதரவுடன்
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து முதலாம் பொக்காசா பேரரசர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத்
தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
2001 – அமெரிக்க அரசுத்தலைவர்
ஜார்ஜ் டபிள்யூ புஷ் " பயங்கரவாதத்திற்கு எதிரான போரை " அறிவித்தார்.
2003 – மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது.
2017 – சூறாவளி மரியா
புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்
1870 – இரா. இராகவையங்கார் , தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1946 )
1908 – ப. ராமமூர்த்தி , இந்திய மார்க்சிய அரசியல்வாதி (இ. 1987)
1920 – சி. ஆர். ராவ் , இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்
1923 – நாகேசுவரராவ் , தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2014 )
1940 – டாரோ ஆசோ , சப்பானின் 92வது பிரதமர்
1946 – மார்க்கண்டேய கட்சு , இந்திய நீதிபதி, வழக்கறிஞர்
1948 – ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் , அமெரிக்க எழுத்தாளர்
1949 – மகேசு பட் , இந்திய இயக்குநர், தயாரிப்பாளர்
1952 – மனுவேல் செலாயா , ஒந்துராசின் அரசுத்தலைவர்
1971 – மிஷ்கின் , தமிழகத் திரைப்பட இயக்குனர்
1984 – செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் , தமிழ்த் திரைப்பட வரைகலை வடிவமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
1991 – ஸ்பென்சர் லோக்கே , அமெரிக்க நடிகை

இறப்புகள்
1796 – யுவான் ஒசே எலுயார் , எசுப்பானிய வேதியியலாளர், கனிமவியலாளர் (பி. 1754)
1840 – யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா, பரகுவே அரசியல்வாதி (பி. 1766 )
1863 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 1785 )
1927 – பர்கதுல்லா , இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர் (பி. 1854 )
1928 – நாராயணகுரு , இந்திய ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1855 )
1933 – அன்னி பெசண்ட் , ஆங்கிலேய
பிரம்மஞானி, பெண்ணிய செயற்பாட்டாளர் (பி. 1847 )
1996 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (பி.
1913 )
1999 – டி. ஆர். ராஜகுமாரி , தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1922 )
2011 – புர்கானுத்தீன் ரப்பானி , ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர் (பி. 1940 )
2015 – ஜக்மோகன் டால்மியா , இந்தியத் தொழிலதிபர் (பி. 1940 )

சிறப்பு நாள்
விடுதலை நாள் ( தெற்கு ஒசேத்தியா)
குழந்தைகள் நாள் ( செருமனி )
வெளி இணைப்புகள்

பிபிசி : இந்த நாளில் http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/20

நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில் http://www.nytimes.com/learning/general/onthisday/20060920.html

கனடா இந்த நாளில் http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Sep&day=20

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews