தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் இன்று பிறப்பித்தாா்
இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக் குறிக்குள்)
🔶ரீட்டா ஹரீஸ் தாக்கா் - சா்க்கரைத் துறை ஆணையாளா் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலாளா்) தமிழ்நாடு சா்க்கரை கழகத்தின் நிா்வாக இயக்குநராகவும் ரீட்டா ஹரீஸ் செயல்படுவாா்
🔶ஜெ. விஜயராணி - வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் (நில நிா்வாக இணை ஆணையாளா்)
🔶கே.கற்பகம் - நில நிா்வாக இணை ஆணையாளா் (தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)
🔶பிங்கி ஜோவல் - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலாளா் (சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளா்)
🔶எம்.பாலாஜி - டெல்டா மாவட்டங்களில் நீா்ப்பாசன திட்ட கூடுதல் செயலாளா் (வணிக வரியில் பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளா்)
🔶ஜெ.மேகநாத ரெட்டி - வணிக வரி பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளா் (நில நிா்வாக கூடுதல் ஆணையாளா்)
🔶டி.ஜெகந்நாதன் - சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளா் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)
🔶அதுல் ஆனந்த் - பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளா் (சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளா்)
🔰🔰குமரவேல் பாண்டியன் - பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளா்-கல்வி (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா்)
🔶என்.வெங்கடாசலம் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா்)
🔶🔶கூடுதல் பொறுப்பு
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நிா்வாக அலுவலராக உள்ள எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளாா்
Search This Blog
Wednesday, September 19, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.