முதலமைச்சரின் மின் ஆளுமை விருது: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: Applications are invited from students for Chief Minister’s Award for Excellence in e-Governance Hackathon event.(Click Here To Download PDF Notice) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 29, 2018

Comments:0

முதலமைச்சரின் மின் ஆளுமை விருது: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: Applications are invited from students for Chief Minister’s Award for Excellence in e-Governance Hackathon event.(Click Here To Download PDF Notice)




Notification Click Above Link

முதலமைச்சரின் மின் ஆளுமை விருது: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் `முதலமைச்சரின் மின் ஆளுமை விருது’ பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் மின் ஆளுமை திறனை  ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு, அரசு துறைகளுக்கான மின் ஆளுமை திட்டங்களை கண்டறிந்து அதனை மென்பொருளாக உருவாக்கி தரும் கல்லூரி மாணவ குழுக்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகள் `முதலமைச்சரின் மின்னாளுமை விருது’ மூலம் வழங்க உள்ளது. kaninikkalvi அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில் நுட்பம் (பாலிடெக்னிக் கல்லூரி) மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் குறைந்தபட்சம் 4 முதல் 6 பேர் கொண்ட  குழுவாக இப்போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்கள் தயாரிக்கும் புதிய மென்பொருளானது மொபைல் தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, செயற்கை அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம், சமூக நலம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு துறை, அரசின் சேவைகளை குடிமக்கள் எளிதில் அணுகுதல், தன்னார்வலர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றுடன் கூடிய பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் பொது மக்களுக்கு தேவையான முறையில் மற்றும் அரசு துறைகளில் எளிதில் கையாளும் வகையிலும் அமைய வேண்டும்.

இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவின் கீழ் முதல் இடம் பிடிக்கும் குழுவிற்கு தலா ரூ.2 லட்சம் பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் மேலும்  குழுவிலுள்ள அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த போட்டி பற்றிய கூடுதல்  விவரங்கள் அறிய மற்றும்  போட்டியில் கலந்து கொள்ள வரும் செப்டம்பர் 1ம் தேதிக்குள்  ciiconn0ect.org இணைய தளத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews