தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள்! மாணவர்களுக்கு இரண்டாவது அரிய வாய்ப்பு! 32 மாவட்டங்களின் தொழிற்பயிற்சி நிலையம் முகவரி மற்றும் தொலைபேசி எண்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 25, 2018

Comments:0

தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள்! மாணவர்களுக்கு இரண்டாவது அரிய வாய்ப்பு! 32 மாவட்டங்களின் தொழிற்பயிற்சி நிலையம் முகவரி மற்றும் தொலைபேசி எண்!


ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்களில், முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது நிரப்பப்பட உள்ளதால், மாணவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இன்று முதல், ஆக., 11 வரை, www.skiltraining.tn.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தமிழகத்தில் உள்ள, தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விபரங்கள், இணையதளத்தில் உள்ள, விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.ஒரு மாணவர், பல மாவட்டங்களில், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2018 ஆம் ஆண்டிற்கான அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை மாவட்ட கலந்தாய்வு மூலம் முதற்கட்டமாக 04.07.2018 முதல் 19.07.2018 வரை நடைபெற்றது. முதற்கட்ட கலந்தாய்விற்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்களை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கை மேற்கொள்ளவுள்ளதால் 25..07.2018 முதல் 11.08.2018வரை மாணவர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.

மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் single window முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வானது 20.08.2018 முதல் 23.08.2018 வரை நடைபெறவுள்ளது. மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் முதலில் 8th பொறியியல் பிரிவுகள், 8th பொறியியல் அல்லாத பிரிவுகள், 10th பொறியியல்பிரிவுகள், 10th பொறியியல் அல்லாதபிரிவுகள் மற்றும் 12th பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் ஆகிய விவரங்கள்விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் போது அளித்த கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் கலந்தாய்விற்காக அழைப்பு ஆணை (Call letter) அனுப்பப்பட மாட்டாது.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து விண்ணப்பதாரருக்கான கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் மாவட்ட கலந்தாய்வு குறித்த விபரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் உள்ள கீழ்காணும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ((Nodal ITI) முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.

1 திருவள்ளூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர் 044-26252453
2 சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி 044-22501530
3 காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், செங்கற்பட்டு 044-27431242
4 வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வேலூர் 0416-2290848
5 திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருவண்ணாமலை 04175-2233018 ☆Kaninikkalvi.blogspot.com☆
6 கோயம்புத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோயம்புத்தூர் 0422-2642041
7 நீலகிரி அரசு தொழிற்பயிற்சி நிலையம், குன்னூர் 0423-2231759
8 திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருப்பூர் 0421-2429201
9 ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244
10 சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சேலம் 0427-2400074
11 நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம், (மகளிர்) நாமக்கல் 04286-267976
12 தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையம், தர்மபுரி 04248-235323
13 கிருஷ்ணகிரி அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒசூர் 04344-262456
14 மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம், மதுரை 0452-2566183
15 தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம், தேனி 04546-252240
16 இராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பரமக்குடி 0454-231300
17 திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கல் 0451-2471414
18 புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 04322-221584
19 சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையம், சிவகங்கை 04575-292494 ▪Kaninikkalvi▪
20 திருச்சிராப்பள்ளி அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருச்சிராப்பள்ளி 0431-2552238
21 கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், (மகளிர்) கரூர் 04324-243050
22 தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் 04362-237054
23 நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகப்பட்டினம் 04365-230129
24 திருவாரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நீடாமங்கலம் 04367-293088
25 அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் 04329-228408
26 பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரம்பலூர் 04328-290590
27 கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கடலூர் 04142-290273 ☆Kaninikkalvi☆
28 விழுப்புரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்தூர்பேட்டை 04149-222339
29 திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருநெல்வேலி 0462-2342005
30 விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் 0456-2252382
31 தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம், தூத்துக்குடி 0461-2340133
32 கன்னியாகுமரி அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகர்கோவில் 0465-2260463

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews