நீட் தேர்வில் அதிக மதிப்பு எடுத்தும், தன்னை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளி மாணவி தனலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 23 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள மொத்தம் 3,393 இடங்களுக்கும் ஒரு திருநங்கை உள்பட 27,417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 1) ஆரம்பித்தது. இந்த கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் கலந்துகொண்டனர்.
Kaninikkalvi.blogspot.com
இதில் கலந்துகொண்டோரில் சான்றிதழ் சரியாக இல்லாததால் மூன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், "நீட் தேர்வில் என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை" தனலட்சுமி என்ற மாணவி புகார் தெரிவித்துதள்ளார்.
சென்னை மணலியைச் சேர்ந்த இவர் மாற்றுத்திறனாளி ஆவார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை என்பதால், தனது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்த்தேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு நீட் தேர்வில் 106 முதல் 208 மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 263 மதிப்பெண் பெற்ற எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். ஆனால், எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. அரசும், அதிகாரிகளும் தலையிட்டு கலந்தாய்வில் நான் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவில் அழைப்பு விடுக்கப்பட்ட 101 பேரில் 63 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 38 பேர் கலந்துகொள்ளவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 38 எம்பிபிஎஸ் மற்றும் 2 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்று முதல் 7ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.