மருத்துவ படிப்பில் சேர தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்வ வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக சிபிஎஸ்இ-க்கு நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மனுவில் சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யபடாமல் இருந்த வினாத்தாளால் தமிழ் வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாமல் போக வாய்ப்புள்ளது என்றும், தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டிருந்த 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சிபிஎஸ்இ.,க்கு 4 கேள்விகளை எழுப்பினர். தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, மேலும் தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது என்பது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப் படுகிறதா என வினவியுள்ளது
நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன என்றும் ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு எதன் அடிப்படையில் நீட் தேர்வு கேள்விகள் மொழிபெயர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கண்ட வினாக்களுக்கு வரும் 6-ம் தேதி பதிலளிக்க சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.