Flash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

Flash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது!



சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கை கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை முடிந்தது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு 1,59,631 பேர் விண்ணப்பித்தனர். 

அவர்களில் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை 42 இணைய சேவை மையங்களில் ஜூன் 15ம் தேதி 17ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் பணி நடந்தது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் 49,781 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளவில்லை.

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைகழகத்தில் இன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 

இதற்கு பின்பு பேட்டி அளித்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் கீர்த்தனா ரவி முதலிடமும், ரித்விக் 2ம் இடமும், ஸ்ரீவர்ஷினி 3ம் இடமும் பிடித்துள்ளதாக தெரிவித்த அவர், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கலந்தாய்வில் 1 லட்சத்து 4,453 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 1 -10ம் தேதி வரை மருத்துவ கவுன்சில் நடைபெறும் என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், ஜூலை 10ம் தேதிக்கு பின்னரே கலந்தாய்வு தொடங்கும் என்று அன்பழகன் உறுதிப்பட தெரிவித்தார். 

மேலும் சான்றிதழ் சரிப்பரப்பின் போது நிராகரிக்கப்பட்ட 5,800 பேரும் மீண்டும் அணுகலாம் என்று குறிப்பிட்ட அவர், பொறியியல் சேர்க்கைக்கான செயலரை அணுகி உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என்றும் ஜூலை 30ம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க முடியாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அன்பழகன் கூறியதாவது: எவ்வித குளறுபடியும் இல்லாமல் சரியான முறையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக தர வரிசை அனுப்பப்படும். நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு பொறியியல் கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews