கல்வித் திட்டங்களை மேம்படுத்த நிதியுதவி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 01, 2018

Comments:0

கல்வித் திட்டங்களை மேம்படுத்த நிதியுதவி!


 

‘இந்தாண்டிலிருந்து பள்ளிக் கல்வித் திட்டங்களை மேம்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளின் செயல்திறனை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை நிதியுதவி வழங்கப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமக்ரா அபியான் திட்டத்துடன், சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் இணைக்கப்படுகின்றன.

“இந்தப் புதிய திட்டம் மூலம் மாநிலங்களுக்கு அதிகளவில் சுதந்திரம் அளிக்கிறோம். அதனால், அதனுடைய செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர்களிடமிருந்தும் சிறப்பான செயல்பாடுகள் வெளிப்பட வேண்டும்” என மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

“முக்கியக் கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவி, 15 முதல் 20 வரையிலான நிதியுதவி செயல்திறன் அடிப்படையிலும், மீதம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் விளைவு மற்றும் தகுந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தல் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த நிதியுதவித் திட்டம் மாநில அரசுகள் சிறந்த முறையில் செயல்பட ஓர் உந்துதலாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் உள்ள பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால், தகுதியான ஆசிரியர்களைப் பணியமர்த்தல் என்பது அரிதாகவே இருக்கிறது.

30-40 சதவிகிதக் காலியிடங்கள் இருந்தும் வேலையின்மை பற்றி பேசுகிறோம்.
நகரங்களில் இருக்கும் ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்துவதை விட்டு, எங்கே ஆசிரியர்கள் தேவை இருக்கிறதோ, அங்கேயே ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களைப் பணியமர்த்தல் என்பது மிகவும் பெரிய பிரச்சினை.
kaninikalvi.blogspot.in

ஒட்டுமொத்த ஆசிரியர், மாணவர்கள் விகிதம் 1:27. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைமுறையில் இருக்க வேண்டிய விகிதம் 1:30. அதனால்தான், நாங்கள் அதிகளவில் நிதி ஒதுக்குகிறோம். ஆனால், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைப் பணியமர்த்துங்கள் என மாநில அரசுகளுக்கு வலியுறுத்துகிறோம்” எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

“இந்தக் கல்வியாண்டில் கல்வித் திட்டங்களுக்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.34,000 கோடி வழங்கும். அடுத்த ஆண்டு இந்தத் தொகை ரூ.41,000 கோடியாக உயரும். அடுத்த ஆண்டுக்காக திட்டமிடப்பட்ட கூடுதல் செலவினம், சிறந்த செயல்பாடுகளைக் காண்பிக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியளிக்கும்.kaninikalvi.
இந்தியாவில் நிலையான பள்ளிக் கல்வியின் தரம் என்பது பிரச்சினையாக இருந்துவருகிறது. பள்ளி மாணவர்கள் அடிப்படை கல்வியைச் சரியாகப் படிப்பதில்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் மனிதவளம் வளர்வதைப் பாதிக்கும் .


தனியார் பள்ளிகளைக் காட்டிலும், மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அந்த அனுபவத்தின் மூலம், ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் மாநிலம் மற்றும் மாநகராட்சி நடத்தும் அரசுப் பள்ளிகளும் அதே அளவுக்கு மேம்பட வேண்டும்” எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews