பூடானின் 50வது ஆசிரியர் தினத்தை ஒட்டி இந்தியாவில் இருந்து சென்று பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உட்பட 39 ஆசிரியர்களை அழைத்து விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.
இந்தியாவின் வடஎல்லையிலுள்ள மிகச்சிறிய நாடு பூடான். கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இந்த நாடு 1962ல் இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொண்டது. இதன் மூலம் இந்திய அரசு பூடான் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.kaninikkalvi. பூடானில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவி இந்திய ஆசிரியர்கள் மூலம் கல்வியளிக்கப்படுகிறது.
பூடான் வளர்ச்சிக்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்ட பூடான் மன்னரின் பிறந்த நாளான மே 2ம் தேதியை அந்த நாடு ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது. இந்தியாவின் கல்வி சேவையால் அந்த நாடு இன்று கல்வியில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதனை போற்றும் வண்ணம் 50வது ஆசிரியர் தினத்தையொட்டி பூடானில் கல்வி பணியாற்றிய இந்தியர்களை கவுரவிக்க அந்நாட்டு அரசு விரும்பியது.
Kaniniklalvi.blogspot. in
இதற்காக இந்தியாவிலிருந்து அங்கு சென்று பணிபுரிந்த 39 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் நாகபட்டினத்தை சேர்ந்தவர். மற்றொருவர் குமரி மாவட்டம் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த மோகன்குமார்(62) என்பவர் ஆவார்.
இவர்களை பூடான் தலைநகர் திம்புவிற்கு அழைத்து ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளனர். விருதுகளை பூடான் பிரதமர் சிறிம்தோப்கே வழங்கினார். பூடான் மன்னர் ஜிக்மிகேசர் நாம்கேல்வாம்சுக் அனைவரையும் பாராட்டி இந்தியாவின் கல்வி உதவியை நினைவு கூர்ந்துள்ளார். விழாவில் கலந்து கொண்ட இந்திய ஆசிரியர்களின் முழு செலவையும் பூடான் அரசு ஏற்றது.இது குறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் மோகன்குமார் கூறுகையில், 1980ம் ஆண்டு ஆசிரியர் பணிக்காக பூடான் சென்றேன். அப்போது பூடான் மிகவும் பின் தங்கியிருந்தது. இந்திய உதவியால் இன்று பூடான் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. kaninikkalvi.blogspot.in
பூடானில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் நான் கலந்து கொண்டு விருதுபெற்ற நிகழ்வை தொலைகாட்சியில் பார்த்த என் முன்னாள் மாணவர்கள் பலர் நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் பூடான் நாட்டு விவசாயதுறை அமைச்சராக உள்ளார். ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். மற்றும் ஏராளமானோர் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை பொறுப்புகளிலும், மருத்துவ துறையிலும் உள்ளனர். தங்களிடம் கல்வி பயின்ற பலரும் உயர் அந்தஸ்தில் உள்ளதை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.