"பயோ மெட்ரிக் முறை " ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

"பயோ மெட்ரிக் முறை " ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் விளக்கம்



பயோ மெட்ரிக் முறை , பணியாளர்களை குறித்த நேரத்தில் பணிக்கு வரவழைப்பதும் பணி முடிந்து சரியான நேரத்தில் வீட்டிற்கு திரும்பிச்செல்லவும் உதவும் அற்புதமான சாதனம்தான்;மறுப்பதற்கில்லை.
உதாரணமாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகர்ப்பகுதிகளில் ஓர் நிறுவனம் இருக்குமேயானால் அதன் அருகிலேயே ஒரு பணியாளர் வீடு வாடகை எடுத்து தங்கிக்கொள்வார்.அல்லது அருகில் உள்ள , போக்குவரத்து வசதி சரியாய் உள்ள கிராமத்தில் தங்கிக் கூட பணிக்கு குறித்த நேரத்தில் வந்து பயோமெட்ரிக் முறை மூலம் தனது வருகையை உறுதி செய்வார். தனது பிள்ளைகளும் நகர்ப்புற ம் என்பதால் விரும்பிய பள்ளியில் படிக்க வைப்பதில் பிரச்சினை ஏதுமில்லைதான். ஆனால் நகரப்பகுதிகளில் இருந்து கிராமத்தில் இருக்கும், போக்குவரத்து வசதிகளற்ற அல்லது சரியான நேரத்தில் பேருந்து வசதி இல்லாத ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆண் ஆசிரியர் செல்வதே கஷ்டம். 

பெண் ஆசிரியர்களின் நிலை என்ன?
எங்களுக்கு தரும் HRA_வை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு அந்தந்த ஊர்களில் "குடியிருப்புக்கள் "கட்டி கொடுத்துவிடுங்கள், காவல்துறையினர்க்கு இருப்பது போல. அப்படியே எங்களுக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தால்கூட எங்கள் பிள்ளைகள் படிக்கும் உயர் கல்விக்காக பேருந்து வசதியை காலை மாலை அரசால் ஏற்படுத்தித்தர முடியுமா? இது போன்ற சிற்சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு " "பயோ மெட்ரிக் வருகையை" அமல் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றை யெல்லாம் நாம் சொல்லித்தான் அரசோ அதிகாரிகளோ தெரிந்துகொள்ளப் போவதில்லை. 

தூங்குவது போல் நடிப்பவர்கள எழுப்ப முடியாது. பேருந்து இயங்காத நாளில் வருகைப்பதிவை எவ்வாறு உறுதி செய்வது? பணிமனை மேலாளரும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர் மூலம் செய்தி சேகரிக்க உத்தேசம் உள்ளதா? அதிகாரிகளோடும் அவர்களது ஆசீர்வாதத்தோடும் பள்ளிக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர்கள் வேலை நிறுத்த காலத்தில் மட்டும் கரெக்டா பள்ளிகளுக்கு போனார்களே ,அவங்க இதுக்குமேல ஒழுங்காக பள்ளிக்கு போவாங்க. அவர்களைப் பழிவாங்க
மட்டும்தான் இந்த திட்டம் உதவப்போகுது. இதுதான் உண்மை. மகிழ்வுறக் கற்றல் மாணவர்களுக்கு என்றால் மகிழ்வுடன் கற்பித்தல் என்பது ஆசிரியர்களுக்கு இல்லையா?
Kaninikkalvi.blogspot.com 

"காலம் தவறாமை என்பது இரயில்களுக்கு
மட்டும்தானா? உங்களுக்கும் கூட" என்று மாணவர்களுக்காக ஆசிரியர்களால் பள்ளியில் எழுதிவைத்த வாசகத்தைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். ஏராளமான ஆசிரியர்களை மன உளைச்சல் ஏற்படுத்தி பணியைவிட்டே ஓட வைக்க வந்த திட்டமாகவே இதை ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். கண்டனக் கணைகளின் வெளிப்பாடே இந்த பதிவு. முதலில் இத்திட்டத்தை எண்ணிக்கையில் குறைவாக உள்ள பணியாளர்களைக் கொண்ட வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டார வளமையங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் முதலியவற்றில் அமல்படுத்தி வெற்றி கண்ட பின் ஏன் இதை பள்ளிகளில் அமுல்படுத்தக்கூடாது? நான் ஏன் இதை சொல்றேன்னா, சமீபத்தில் இறப்புச்சான்று ஒன்று வாங்க விடுப்பு போட்டுவிட்டு நடையாய் நடந்தேன். காலை பதினோரு மணி வரை பணியாளர்கள் வரவில்லை. அதுக்குதான் இதை சொல்லுகிறேன். 

அங்கே கேட்க ஆளில்லை. ஆசிரியர்கள்தான் இளித்தவாயர்களா? பசுமரத்தாணிக்கு பாறை நெக்குவிடும்.... நெட்டிருப்புப் பாறைக்கு ஒன்று கூடி ஆய்வோம்... உளவு ஒன்று காண்போம்.... விரைவில் மணியடிக்கும்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews