அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2018-19ல் கல்வி கற்கபுதிதாக சேர்ந்துள்ளமாணவர்களுக்கு வரவேற்பு விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.முன்னதாக பள்ளிஅருகேயுள்ள வளாகத்தில் இருந்து பேன்ட் இசை வாத்தியங்கள் முழங்க புதிய மாணவர்களை தலைமை ஆசிரியர் எஸ்தர் ராணி அழைத்து வந்தார்.பள்ளி வளாகத்திற்குள் வந்தவர்களை கலெக்டர் மாலை அணிவித்துவரவேற்றார்.
தொடர்ந்து இலவச பாடப்புத்தகங்கள், புத்தக பைகளை வழங்கி இனிப்பு வழங்கினார். பின், நெல்மணிகள் மீது தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' எழுத கற்றுக் கொடுத்தார். முதன்மைக்கல்விஅலுவலர் முருகன் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.