இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பித்தவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முடிந்தது. அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு, இன்ஜினியரிங் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளம் மூலம் நடத்துகிறது. இதற்காக மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அந்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டது.
இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இணைய சேவை மையத்தில் மட்டும் கூடுதலாக 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இணைய சேவை மையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்களிடம் விருப்பப்பட்டியல் பெறுதல், ஆன்லைனில் இடம் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.