1,300 பள்ளிகளை இழுத்து மூடும் அரசு 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 10, 2018

1 Comments

1,300 பள்ளிகளை இழுத்து மூடும் அரசு 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிக்கல்


   பணி நிரவல் மூலம் 1,300 பள்ளிகளை மூடி 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார். 

அவர் கூறியதாவது நிர்வாக சீர்திருத்தம் என தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, ஆங்கில வழி கல்வித்துறைகளை ஒருங்கிணைந்துள்ளனர். ஒரே அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பதால் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, துறைகள் இணைப்பை கைவிட வேண்டும்

காமராஜர் முதல் ஜெயலலிதா வரை இருந்த முதல்வர்கள் ஆண்டுதோறும் புதுப்புது பள்ளிகளை திறந்தனர். முதல்முறையாக இப்போது 1,300 பள்ளிகளை அரசு மூடுகிறது. கல்வி அமைச்சரோ, 'பள்ளிகளை மூட வில்லை. ¤Kaninikkalvi¤இணைப்பு மையமாக செயல்படும்' என்கிறார். 15,000 பணியிடம் காலி பணி நிரவலால் பள்ளிகள் மூடப்படும். அங்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கிராம மக்களிடம் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

புதிய பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஓடி வருவர்' என்கிறார் கல்வி அமைச்சர். மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் போது ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும். பணிநிரவலால் இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,000 பேர் குறைக்கப்பட உள்ளனர். ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும். பணிநிரவலை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்



👍Join Our WhatsApp Group👇Click Here


1 comment:

  1. என்ன தான் புதிய கல்வி முறை வந்தாலும் அது தனியார் பள்ளியை cbse பள்ளியாக மாற்றாமல் இருப்பதற்கான வழி முறை தான். கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் இல்லை என்றால் எவ்வாறு மக்கள் அரசு பள்ளியை நாடுவர். இன்னும் 10 ஆண்டுகளில் அரசு பள்ளி மிக பெரிய கஷ்டத்தை சந்திக்க போகிறது. ஆசிரியர் எந்த எந்த துறைக்கு மற்ற பட போகிறார்களோ?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews