

நெட்' தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பை, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, சென்னை பல்கலையில் நடத்தப்படுகிறது
பல்கலை மாணவர் ஆலோசனை மையம் வழியாக, இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பொது பிரிவு இனத்தவர் தவிர, மற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்
ஜூன், 2 முதல், 24 வரை, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த பயிற்சிக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. மே, 31 வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்ப படிவத்தை, www.unom.ac.in என்ற, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.