பாகிஸ்தானை சேர்ந்த மலாலா பள்ளியில் படித்தபோது, பெண்கள் கல்வியை வலியுறுத்தி பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் 2012 ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து, பஸ்சில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மலாலா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மலாலாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தார்.
2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
இளம் வயதில் இந்த பரிசை பெற்றவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலாலாவின் வாழ்கை 'குல் மக்காய்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. தனது 11 வது வயதில் இந்த பெயரில்தான் பெண் கல்வியை வலியுறுத்தி தனது வலைத்தளத்தில் அவர் எழுதிய வந்தார். அதையே படத்துக்கு பெயராக வைத்துள்ளனர்.
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் தயாராகிறது. அமஜத்கான் இந்த படத்தை இயக்குகிறார். மலாலாவாக ரீம்சேக் நடிக்கிறார். அதுல் குல்கர்னி, முகேஷ் ரிஷி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இதனால் 'மலாலா வீடு, படித்த பள்ளி, ஆகியவற்றை அரங்குகளாக அமைத்து படமாக்க உள்ளதாகவும், படத்தின் அதிக படியான காட்சிகள் காஷ்மீரில் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ள படக்குழுவினர். முதல் நாள் வசூல் மலாலாவின் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.