உங்களின் லேன்ட்லைன் நம்பரை கூகுள் வாய்ஸ்-க்கு போர்ட் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 27, 2018

Comments:0

உங்களின் லேன்ட்லைன் நம்பரை கூகுள் வாய்ஸ்-க்கு போர்ட் செய்வது எப்படி?




ஸ்மார்ட்போன் காலத்திலும் வீட்டில் லேன்ட்லைன் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்துகிறீர்களா? கேள்வி பொதுவானது தான் என்றாலும், லேன்ட்லைன் கனெக்ஷனை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுத்து விட முடியாது என்பதே பலரின் உடனடி பதில் ஆக இருக்கும். இதற்கு முக்கிய காரணங்களாக இந்த லேன்ட்லைன் நம்பரை பல வருடங்கள் பயன்படுத்தியது, மற்றும் இதே நம்பரை பல்வேறு அலுவல்களுக்கு வழங்கி இருப்பது போன்றவை நிச்சயம் இருக்கும்.
லேன்ட்லைன் இணைப்பு ஆக்டிவ் மோடில் இருந்தாக வேண்டிய சூழலில் இந்த நம்பர் மட்டும் இருந்தாலே போதும். அந்த வகையில் உங்களது லேன்ட்லைன் நம்பரை மாற்றாமல் அதனை கூகுள் வாய்ஸ்-க்கு போர்ட் செய்வது சிறப்பான யோசனையாக இருக்கும்.

இவ்வாறு செய்வதால் லேன்ட்லைன் இணைப்புக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.kaninikkalvi.

லேன்ட்லைன் இணைப்பு கட்டணம்

சமூக வலைத்தள உலகத்தில் இன்றும் பழைய டெலிபோன் சேவையை பயன்படுத்துவோர் மாதம் கணிசமான தொகையை அதற்கு கட்டணமாக செலுத்தி வருகின்றனர்.
ஒருவேளை அதிவேக இணைய இணைப்பு வைத்திருக்கிறீர்கள் எனில் நீங்கள் வாய்ஸ் ஓவர் ஐபி போன் சிஸ்டம் போன்ற சேவைக்கு மாரலாம். இது உங்களது ரவுட்டருடன் இணைந்து தொலைபேசி இணைப்பை வழங்கும். இவை வழக்கமான லேன்ட்லைன் இணைப்பு கட்டணத்தை விட குறைவு தான்.
உங்களின் லேன்ட்லைன் நம்பர் கேபிள் அல்லது இன்டர்நெட் சேவையுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அதிக செலவை நீங்கள் மிச்சப்படுத்தி இருக்கிறீர்கள் என்றே கூற வேண்டும்.

ஏன் கூகுள் வாய்ஸ்?

வீட்டு லேன்ட்லைன் இணைப்பில் இருந்து கூகுள் வாய்ஸ் சேவைக்கு மாறுவதால் இந்த சேவையை இலவசமாக பெற முடியும். 2009-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த சேவைக்கு எதிர்காலத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம்.
கூகுள் வாய்ஸ் சேவையை பயன்படுத்தும் போது இன்கமிங் அழைப்புகளை ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களுக்கு மாற்ற முடியும். இதனால் வீட்டுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் வீட்டில் இல்லாத போதும் ஏற்க முடியும்.kaninikkalvi.blogspot.in
இத்துடன் வாய்ஸ்மெயில் சேவையும் வழங்கப்படுவதால், உங்களுக்கு வரும் வாய்ஸ்மெயில் குறுந்தகவல் வடிவில் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இத்துடன் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனை இன்கமிங் அழைப்புகளில் மட்டுமே செய்ய முடியும்.

எதற்கு கூகுள் வாய்ஸ்?

கூகுள் வாய்ஸ் சேவையை கொண்டு 911 அழைப்புகளை மேற்கொள்ள முடியும். எனினும் இந்த நம்பரை பயன்படுத்தினாலும் மற்ற மொபைல் நம்பர் கொண்டே அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், நீங்கள் ஏற்கனவே கூகுள் வாய்ஸ் நம்பரை பயன்படுத்தினால் லேன்ட்லைன் நம்பரை போர்ட் செய்யும் போது பழைய நம்பருக்கு மாற்றாக புதிய நம்பர் பதிவு செய்யப்படும்.

போர்ட் செய்ய முடியுமா?

வீட்டு லேன்ட்லைன் நம்பரை நேரடியாக கூகுள் வாய்ஸ் சேவைக்கு போர்ட் செய்வதில் தொழில்நுட்ப சிக்கல் இருக்கிறது. இந்த சேவையில் லேன்ட்லைன் அல்லது வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் சேவைகளில் இருந்து போர்ட் செய்ய முடியாது.kaninikkalvi. 
எனினும் மொபைல் நெட்வொர்க்களில் இருந்து போர்ட் செய்ய முடியும். அந்த வகையில் முதற்கட்டமாக லேன்ட்லைன் நம்பரை மொபைல் நெட்வொர்க்-க்கு மாற்றி அதன் பின் கூகுள் வாய்ஸ் சேவைக்கு போர்ட் செய்ய முடியும்.

லேன்ட்லைன் நம்பரை மொபைல் நெட்வொர்க்-க்கு மாற்றியதும், கூகுள் வாய்ஸ் சேவைக்கு போர்ட் இன் செய்யும் போது கூகுள் சார்பில் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கவலை வேண்டும் இதனை ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதுமானது. இறுதி முடிவை எடுக்கும் முன் உங்களகு கூகுள் வாய்ஸ் நம்பர் போன் நம்பருடன் இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
போர்ட் செய்த பின் என்ன செய்ய வேண்டும்?

போர்ட்டிங் வெற்றிகரமாக நிறைவுற்றதும், செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று இன்கமிங் அழைப்புகளை மற்றொரு நம்பர்களுக்கு மாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews