'தமிழக அரசின், புதிய பாடத்திட்ட புத்தகங்கள், வரும், 31ம் தேதி, ஆன்லைனில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதனால், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகமாகின்றன.
இந்த பாடப்புத்தகங்களின் விற்பனை, துவங்கியுள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.மொத்தமாக ஆர்டர் செய்த, தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையத்திலும், அண்ணா நுாலக விற்பனை மையத்திலும், புத்தக விற்பனை துவங்கியுள்ளது. இந்த மையங்களில், பெற்றோர் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. வரும் நாட்களில் அதிகரிக்கும் என, தெரிகிறது.
இதற்கிடையில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அனைத்தும், வரும், 31ம் தேதி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.