மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று சனிக்கிழமை வெளியிட்டது.
சிபிஎஸ்இ பிளஸ் - 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இம்முறை அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்தது.
ஆனால், அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பொருளியல் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தியது. kaninikkalivi.blogspot.in இதனிடையே, வேறு சில பாடங்களிலும் குழப்பமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் தேர்வு முடிகள் இன்று சிபிஎஸ்இ-யின் இணைய தளங்களான (cbse.nic.in அல்லது cbseresults.nic.in) ஆகிய இணையப் பக்கங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 498 மதிப்பெண்கள் பெற்றரு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனர்.
மண்டல வாரியாகப் பார்க்கும்போது திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்திலும், சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாமிடத்திலும், தில்லி மண்டலம் 89 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
Kaninikkalivi.blogspot.in
மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.