இறந்த இடைநிலை ஆசிரியரின் பென்ஷனை பிரித்து வழங்க கோரி 2ம் மனைவி வழக்கு : கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 22, 2018

Comments:0

இறந்த இடைநிலை ஆசிரியரின் பென்ஷனை பிரித்து வழங்க கோரி 2ம் மனைவி வழக்கு : கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு


 
இறந்த இடைநிலை ஆசிரியரின் பென்ஷனை பிரித்து வழங்கக்கோரி இரண்டாம் மனைவி தொடர்ந்த வழக்கில், கல்வி அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.kaninkkalvi.blogspot.in திண்டுக்கல்லைச் சேர்ந்த கலைச்செல்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய ஜேம்ஸ் என்னை 2ம் திருமணம் செய்து கொண்டார். எனக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த 13.11.2017ல் கணவர் இறந்தார். அவரது இறப்பு மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை சட்டப்படி பெற எனக்கும், என் மகனுக்கும் உரிமை உண்டு. எனவே, அவரது இறப்பு மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு சமமாக பிரித்து வழங்கக்கோரி கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.

அவர்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் கணவரின் இறப்பு மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும்.kaninkkalvi.blogspot.in 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அப்போது ஏற்கனவே முதல் மனைவி தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் மற்றும் அவரது வாரிசு, முதல் மனைவி மற்றும் அவரது வாரிசு தாரர்கள் என அனைத்து தரப்பினரும் உரிய விளக்கமளிக்க வாய்ப்பளித்து சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் 6 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews