கணினி ஆசிரியர்கள் 30 நாட்களில் நியமனம் செய்யப்படுவார்கள்:நாட்டிலே முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 21, 2017

4 Comments

கணினி ஆசிரியர்கள் 30 நாட்களில் நியமனம் செய்யப்படுவார்கள்:நாட்டிலே முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு



நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்
நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். மேலும் கணினி ஆசிரியர்கள் 30 நாட்களில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் பொதுத்தேர்வை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார். 6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவின் கீழ், 100 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் துவங்கப்படும். என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை அவர் வழங்கினார்.

4 comments:

  1. கல்வி செயலாளர் திரு உதயசந்திரன் IAS அவர்கள் வந்து தான் கல்வியில் புரட்சி கொண்டுவந்தார். அனைத்து தரப்பும் அவரை பாராட்டி வந்தனர். ஆனால் அவரை தற்போது பதவியில் இருந்து நீக்கியது ஏன் முதல் அமைச்சர் அவர்களே? இதை எந்த மீடியாவும் கண்டுகொள்ளாதது ஏன். 5000 மேற்ப்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளுக்கு இன்னும் ஏன் பணி ஆணைகள் வெளியிட வில்லை.

    ReplyDelete
  2. தேர்தல் வரட்டும், உங்களுக்கு வெக்கிறேன் ஆப்பு


    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews