கணினி ஆசிரியர்கள் இன்னும் 2 மாத காலத்திற்குள் நியமனம்;தமிழகத்தில் ரேங்க் பட்டியல் முறையை நீக்கியது ஏன்;அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 21, 2017

Comments:0

கணினி ஆசிரியர்கள் இன்னும் 2 மாத காலத்திற்குள் நியமனம்;தமிழகத்தில் ரேங்க் பட்டியல் முறையை நீக்கியது ஏன்;அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Use Google Chrome Browser To Read The Below News 





ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .


ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .

ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம் நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது . இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது,   எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .

இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால் மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள 1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .

உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews