விரைவில், 2,372 ஆசிரியர்கள் நியமனம்;'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு: கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 30, 2017

1 Comments

விரைவில், 2,372 ஆசிரியர்கள் நியமனம்;'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு: கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

 ''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் அவர் பேசியதாவது:

கல்வித் துறையில் இணை இயக்குனர் நிலை அதிகாரிகள், நிபுணர்கள், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் உள்ள திறமையை தட்டி எழுப்பும் முயற்சி நடக்கிறது. வரும் ஆண்டில், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக வெளியாகும்.

அடுத்த மாதம், 1.28 கோடி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். வரும் ஆண்டில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் என, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மையம் அமைக்க, 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், 'வை பை' இணைப்பு வழங்கப்படும்.

விரைவில், 2,372 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் பகுதியில் பணியாணை வழங்கப்பட உள்ளது, என்றார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews