கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 27, 2017

Comments:0

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்


கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.' என்று தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:புதுச்சேரியில் ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை, ஆன்-லைன் லாட்டரி, விபசாரம் ஆகியவற்றை அரசு ஒழித்துள்ளது. இவற்றை கவர்னர் உரையில் கூறியிருக்கலாம். முதல்வர் பல முறை டில்லி சென்று நிதி கேட்டுள்ளார். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு பணம் தரவில்லை. அவர்களுக்கு வறட்சி நிவாரணம் தரவில்லை.

கடந்த ஆட்சியில் பாசிக் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு நிறுவனங்களில் வெளி மாநில வியாபாரிகள் தொடர்பு வைத்துக்கொள்ளவே பயப்படுகின்றனர். அந்நிறுவனங்கள் ரூ.250 கோடி அளவிற்கு பொருட்களை வாங்கியுள்ளன. ஆனால் பணம் தரவில்லை. கேட்டால் கமிஷன் கேட்கின்றனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் தனியார் பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறும் வசதியில்லை. எனவே அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மத்திய அரசின் பல்கலைக்கழகத்திலேயே 25 சதவீத இட ஒதுக்கீடு வாங்காத நிலையில், தனியார் பல்கலைக் கழகங்களை ஊக்குவிப்பது அவசியமா... இட ஒதுக்கீடு தராத மருத்துவக்கல்லுாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பதை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கொண்டுவர வேண்டும். ஆண்டிற்கு 50 வீடற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.புதுச்சேரிக்கு வரும் கவர்னர்களை மக்கள் தங்கள் குடும்பத்தினரில் ஒருவராகத்தான் பார்க்கின்றனர்.

அதுபோல் தான் இவரையும் பார்க்கிறோம். எனவே, கவர்னர் கிரண்பேடி தனித்து சென்று சங்கடப்படக் கூடாது. குடும்பத்தில் ஒருவராக வரவேண்டும். இவ்வாறு சிவா எம்.எல்.ஏ., பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews