சர்வதேச தரத்தில் நுங்கம்பாக்கம் பள்ளி புதுப்பொலிவு ஏற்படுத்தி சென்னை மாநகராட்சி அசத்தல் -
Chennai Corporation is amazing by renovating Nungambakkam school to international standards
நுங்கம்பாக்கம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளை 'ஸ்மார்ட்' பள்ளிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனாம்பேட்டை மண்டலம், 110வது வார்டுக்கு உட்பட்ட, நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தரத்தை மேம்படுத்த, சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து, 'சிட்டிஸ்' திட்டத்தில், 4.8 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளி கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
கழிப்பறை வசதிகள்,வண்ண மயமான 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், புதிதாக இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
'டைல்ஸ்' பதிப்பு, சுவர்களுக்கு வண்ணம், அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாணவியர், சைக்கிள்களை நிறுத்த தனியே இடம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில், பல்வேறு கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதிகாரிகள் கூறியதாவது:
நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை, சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துவதற்காக அனைத்து கட்டமைப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பள்ளியில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இறுதிக்கட்ட பணிகள், அடுத்த சில வாரங்களில் முடியும்.
சர்வதேச தரத்தில், இப்பள்ளி மாறியுள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் மாணவியரின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.