This Tamil news article reports on the high demand for admissions into government model schools, particularly in districts like Salem.
The article highlights that despite the central government's efforts to provide quality education to rural students, parents are struggling to secure seats for their children due to intense competition.
School administrators are urging the government to increase the intake capacity by adding more sections, as classrooms are often overcrowded and many students are denied admission
மாதிரி பள்ளிகளுக்கு தொடரும் வரவேற்பு
கூடுதல் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தல் Continued positive response to model schools; call to enroll more students.
சேலம், ஜூன் 10
அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் இடையே போட்டி நிலவுவதால், கூடுதல் மாண வர்களை சேர்க்க வலியுறுத் தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தில், 2011 - 12ம் ஆண்டில், கல் வியில் பின்தங்கிய ஒன்றியங் களில் அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி அரியலுார், தர் மபுரி, பெரம்பலூர், விழுப் புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ் ணகிரி, திருப்பத்துார் உள் னிட்ட மாவட்டங்களில், 42 பள்ளிகள் தொடங்கப்பட்
டன. அப்பள்ளிகளின் கட்டு மானம், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு வச திகளுக்கு, முதல், 3 ஆண் டுக்கு, மத்திய அரசு நிதியு தவி வழங்கிய நிலையில், பின் மாநில அரசிடம் ஒப்படைத்தது.
மத்திய அரசு கட்டுப் பாட்டில் இருந்தபோது, ஒரு வகுப்புக்கு இரு பிரிவு வீதம், 80 மாணவர்கள் சேர்க்க அனு மதிக்கப்பட்டனர். தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு ஆசிரி யர்கள், ஆங்கில வழி கல்வி, பல கோடி ரூபாயில் கட்டு மானங்கள், லேப் உள்ளிட்ட வசதிகளால், மக்களிடம் பெற்றன.
இப்பள்ளிகள் நற்பெயரை
தற்போது தமிழக அரசு கட்டுப்பாட்டில் அரசு பள் னியாக தொடர்ந்தாலும், அதன் நற்பெயருக்கும்,
பெற்றோரிடம் வரவேற்பும் குறைவில்லை. 6ம் வகுப்பு சேர்க்கைக்கு. ஒவ்வொரு பள்ளியிலும், 250க்கும் மேற் பட்ட மாணவர்கள் சேர முட்டி மோதுகின்றனர். பலரும், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம், 40 மாணவர்களை கூடுதலாக சேர்க்க, பெற்றோர் வலியு றுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறிய தாவது:
ஆண்டுதோறும், 6ம் வகுப்பு சேர்க்கை, தர்மசங் கடத்தை உருவாக்குகிறது. போட்டித்தேர்வு வைத்தோ, மதிப்பெண் அடிப்படை மிலோ சேர்க்கக்கூடாது என்கின்றனர். குலுக்கல் முறையில் வாய்ப்பு அளிக்க
வேண்டும். அதை பெற்றோர் ஒப்புக்கொள்வதில்லை.
அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள் ளிட்ட ஏராளமான தலையி டுகள் உள்ளன. அருகே உள்ள அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் படித்த ஏழை, மாணவ, மாணவியருக்கு கூட சீட் வழங்க முடிவ தில்லை.
அரசு பள்ளிகளில் பட் டதாரி ஆசிரியர்களின் எண் ணிக்கை உபரியாக உள்ளது. அந்த ஆசிரியர்களை, இங்கு பணி அமர்த்தி, கூடுதல் வகுப் புக்கு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டால், மாணவர்கள், பெற்றோர் பய னடைவர். அதற்கான நட வடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்
கூறினர்.
Wednesday, June 10, 2026
மாதிரி பள்ளிகளுக்கு தொடரும் வரவேற்பு கூடுதல் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தல்
students news
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.