Breaking

Thursday, April 09, 2026

ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்



According to a notice from the Tamil Nadu Teachers Education University, the integrated four-year B.Sc. B.Ed. and B.A. B.Ed. degree courses will be discontinued starting from the 2026-2027 academic year.

Admissions for four-year integrated B.Ed. programs are stopped from the upcoming academic year.

This decision is based on revised rules from the National Council for Teacher Education (NCTE).

Colleges are prohibited from admitting new students to these specific integrated programs.

The university will not be responsible for any admissions made in violation of these rules.

ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்

வரும் கல்​வி​யாண்டு முதல் ஒருங்​கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்​சி.பிஎட்., பிஏ.பிஎட். படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்கை நடை​பெறாது என தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது. தற்​போது கல்​லூரி​களில் 3 ஆண்டு கால பட்​டப் படிப்பை முடித்து அதன் பிறகு 2 ஆண்டு பிஎட் படித்​தால் மொத்​தம் 5 ஆண்​டு​கள் ஆகி​விடும். அதே​நேரத்​தில் ஒருங்​கிணைந்த பிஎட் படிப்பை 4 ஆண்​டு​களில் முடித்​து​விடலாம். பிஎஸ்​சி.,பிஎட்., பிஏ.,பிஎட். என்ற பெயரில் இந்த ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎட். படிப்​பில் சேரு​வ​தால் ஓராண்டு காலம் மிச்​ச​மாகும்.

எனவே ஆசிரியர் பணி​யில்சேர விரும்​பும் மாணவர்​கள் 4 ஆண்டு கால ஒருங்​கிணைந்த பிஎட் படிப்​பில் சேர விரும்​பு​கிறார்​கள். இந்த படிப்​பானது குறிப்​பிட்ட சில கல்​வி​யியல் கல்​லூரி​களி​லும், நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​களி​லும் வழங்​கப்​படு​கின்​றன.

சுற்றறிக்கை:

இந்​நிலை​யில், என்​சிடிஇ-​யின் உத்​தர​வைத் தொடர்ந்து வரும் கல்​வி​யாண்டு முதல் 4 ஆண்டு கால ஒருங்​கிணைந்த பிஎட். பட்​டப் படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்​தப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் (பொறுப்​பு) கே.​ராஜசேகரன், 4 ஆண்டு ஒருங்​கிணைந்த பிஎட். படிப்பை வழங்​கும் கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது:



கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் 12-ம் தேதி அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) ஒரு பொது அறி​விப்பை வெளி​யிட்​டது. அதில், ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்​சி.,பிஎட். மற்​றும் பிஏ.,பிஎட். பட்​டப் படிப்​பு​கள் 2026-27 கல்​வி​யாண்டு முதல் நிறுத்​தப்​படு​வ​தாக​வும், அப்​படிப்​பு​களை நடத்​தும் எந்​த வொரு கல்வி நிறு​வன​மும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனு​ம​திக்​கப்​ப​டாது என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பொது அறி​விப்​பின்​படி, தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துடன் இணைப்பு பெற்று இயங்​கும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் நடத்​தப்​படும் ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்​சி.,பிஎட்., பிஏ.,பிஎட். பட்​டப் படிப்​பு​களில் 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் மாணவர் சேர்க்கை மேற்​கொள்ள அனு​மதி இல்​லை. என்​சிடிஇ விதி​முறை​களை மீறி மாணவர் சேர்க்கை மேற்​கொண்​டால் அதற்கு தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் எந்த விதத்​தி​லும் பொறுப்​பேற்​காது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog