சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
This news report covers the donation of organs from a teacher who passed away following a road accident in Kaveripattinam.
A 36-year-old art teacher, Anbarasu, was declared brain dead after a scooter accident involving another two-wheeler.
Following his passing, his family consented to donate his organs.
His kidneys were sent to government hospitals in Coimbatore and Salem, and his corneas were donated to Dharmapuri Government Medical College.
District Collector Dinesh Kumar and other officials paid their respects to the deceased teacher
காவேரிப்பட்டணம் அருகே, டூவீலர் விபத்தில் மூளைச்சாவு அடைந்த, ஓவிய ஆசிரி யரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம். காவேரிப் பட்டணம், எர்ரஹள்ளி வேலன் நகரை சேர்ந் தவர் அன்பரசு, 36. ராமாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில், கடந்த, 20 ஆண்டுகளாக பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த, 18ம் தேதி காலை, 8:30 மணியளவில் வீட்டருகே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த யமாஹா ரே ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் இருத்து மேல் சிகிச்சைக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரை மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத் துவமனைக்கு கொண்டு வந்த குடும்பத்தினர், அவரது உடல் உறுப்பு களை தானமாக கொடுக்க முன்வந்தனர்.
கண் அதன்படி அவரது சிறுநீரகங்கள் கோவை, சேலம் அரசு மருத்துவ மனைகளுக்கும், கருவிழி படலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் வழங் கப்பட்டது.
இதன் மூலம், சுக்கும் மேற் பட்டோர் பயனடைவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்பரசு உடலுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மருத் துவக்கல்லூரி முதல்வர் சத்ய பாமா மற்றும் அலுவலர்கள் மலர் வளையம் வைத்து, அரசு மரியாதை செலுத்தினர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.